பீஸ்ட் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் - பாசிசத்திற்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் மனு.!


முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் பீஸ்ட் திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பாசிசத்திற்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் மனு  அளித்தனர்.

ஏப்ரல் (13). அன்று விஜய் நடிப்பில் பிஸ்ட் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் முஸ்லீம் சமுதாயத்தை பயங்கரவாத சமுதாயமாக இழிவுபடுத்தும் நோக்குடன் எடுக்கப்பட்டதாக சர்சை உருவாகியது.

இது தொடர்பாக, பாசிசத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பீஸ்ட் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பின்னர், மத்திய மாவட்ட செயலாளர் இக்பால் கூறுகையில், "விஸ்வரூபம், துப்பாக்கி போன்ற திரைப்படங்கள் முஸ்லீம் சமுதாயத்தை பயங்கரவாத சமுதாயமாக இழிவுபடுத்தும் நோக்குடன் எடுக்கப்பட்டு மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டன.

சமீபத்தில் வெளியாகி உள்ள விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்திலும் இது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இது இஸ்லாமிய சமூகத்தின் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இத் திரைப்படத்தினால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் உள்ளது. 

மக்கள் மத்தியில் வெறுப்பு அரசியலை தூண்டி, பிளவை ஏற்படுத்தும், சமூக ஒற்றுமையை குலைக்கும் திரைப்படங்களை யார் எடுத்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பீஸ்ட் திரைப்படத்திற்கு தடை விதிக்க தமிழக முதல்வருக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்ய வேண்டும் என கூறினார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில், முகமது ஜான், அப்பாஸ், சுலைமான், சந்தனராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post