திம்பம் மலைப்பாதையில் இரவு போக்குவரத்து தடை விதித்ததற்க்கு எதிர்ப்பு -தாளவாடியில் கடையடைப்பு போராட்டம், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் விதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து தடைகளை நீக்க கூறி தாளவாடியில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. விவசாய சங்கத்தினர்,வணிகர் சங்கத்தினர் தாளவாடி பேருந்து நிலையத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் விதிக்கப்பட்டுள்ள இரவு நேர போக்குவரத்து  தடையை நீக்கக்கோரி தாளவாடியில் நேற்று முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதில் தாளவாடி பகுதியில் 500க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் தாளவாடி பேருந்து நிலையத்தில் விவசாய சங்கம் மற்றும் வணிகர் சங்கம் சார்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்க்கு விவசாய சங்க தலைவர் கண்ணையன் தலைமை தாங்கினார். 

திம்பம் மலைப்பாதையில் விதிக்கப்பட்டுள்ள இரவு நேர தடையை நீக்கக் கோரியும், உள்ளூர் மக்கள் மற்றும் காய்கறி வாகனங்கள் எந்தவிதமான தடையும் இல்லாமல் எளிதாக செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், காய்கறிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும், தாளவாடி கர்நாடகா என பாகுபாடு காட்டாமல் அனைத்து பகுதி காய்கறிகளும், விவசாய உற்பத்தி பொருட்களையும் 24 மணி நேரமும் வனச்சாலை வழியாக அனுமதிக்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள்,பொதுமக்கள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர். பாதுகாப்பு பணியில் தாளவாடி காவல்துறையினர் ஈடுபட்டனர்.

Attachments area
Previous Post Next Post