எம்ஜிஆர் அவதாரமெடுத்த மு.க.ஸ்டாலின்.! - நரிக்குறவர் வீட்டில் டிபன் சாப்பிட்டு மகிழ்ச்சி - நரிக்குறவர்கள் நெகிழ்ச்சி.!

நரிக்குறவர் இல்லத்தில் காலை டிபன் சாப்பிட்ட முதல்வர் ஸ்டாலின் நரிக்குறவர் குழந்தைக்கு இட்லி ஊட்டி விட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான எம்ஜிஆருக்கு பிறகு நரிக்குறவர்களிடம் நெருங்கி பழகும் முதல்வர் ஸ்டாலின் ஒட்டு மொத்த நரிக்குறவ மக்களின் அன்புக்குரியவராக மாறியிருக்கிறார்.

https://twitter.com/mkstalin/status/1514895353702588419?t=w8-bRyCfpfltYadXqw4FfQ&s=19

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செய்து வருகிறார். குறிப்பாக தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பழங்குடியின, நரிக்குறவர் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை கலைவதற்கு முனைப்பு காட்டி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மாமல்லபுரம் அருகே உள்ள புஞ்சேரியில் நரிக்குறவர் குடியிருப்புக்கு சென்ற அவர், அம் மக்களுக்கு பட்டா வழங்கி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர்  நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 3 மாணவிகள் கல்வி தொடர்பாகவும் சமூகத்தில் அவர்கள் படும் இன்னல் குறித்தும் வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தனர்.

அது சமூகவலைதளத்தில் வைரலான நிலையில், அந்த வீடியோ முதல்வரின் கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து மாணவிகளை தலைமைச் செயலகம் வரவழைத்து  அவர்களுடம் முதல்வர் பேசினார். அதன் பின்னர் மார்ச் 17ஆம் தேதி பால்வளத்துறை அமைச்சர் மு. நாசரின் கைப்பேசி மூலமாக முதலமைச்சர் ஸ்டாலின் அம்மாணவிகளின் குடும்பத்தினர் உள்ளிட்ட நரிக்குறவர் மக்களுடன் பேசினார். அப்போது அவர்களிட் குறைகளை கேட்டறிந்தார். சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தங்களுக்கு தேவைப்படுகிறது என்றும் முதல்வர் ஐயா நேரில் வந்து பார்க்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். அப்போது அவர்களிடம் உங்கள் வீட்டுக்கு வந்தால் சோறு போடுவீர்களா என முதல்வர் கேட்க, அப்போது அவர்கள் கறிசோறு போடுவோம் என்று கூறினர்.

எனவே நிச்சயம் வருகிறேன் என முதல்வர் அவர்களுக்கு அப்போது உறுதியளித்திருந்தார். அதனடிப்படையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆவடி மற்றும் அம்பத்தூர் பகுதியில் உள்ள நரிக்குறவர் காலனி குடியிருப்புக்கு சென்றார். ஆளுநர் கொடுத்த தேனீர் விருந்தை கூட புறக்கணித்துவிட்ட முதல்வர் நரிக்குறவர் சமூக மக்களை நேரில் சந்திக்க இன்று வந்தது கண்டு அம்மக்கள் நெகிழ்ச்சியடைந்தனர். முதல்வரை வரவேற்க நரிக்குறவ இன மக்கள் தயாராக இருந்த நிலையில் அம்மக்களின் குடியிருப்புக்கு சென்று அங்கு மரக்கன்று ஒன்றை நட்டார். அவர்களுக்கு குடும்ப அட்டைகள், முதியோர் உதவித் திட்டம் போன்றவற்றை வழங்கினார். அதைத்தொடர்ந்து ஆவடி நரிக்குறவர் காலனியில் உள்ள நரிக்குறவ மாணவி திவ்யாவியின் வீட்டிக்கு சென்றார். அங்கு மக்கள் வழங்கிய உணவை சாப்பிட்டார்.

நரிக்குறவர் காலனியில் உள்ள ஒருவர் காலை உணவை தயார் செய்திருந்தார். முதல்வருக்கு இட்லி வடை வழங்கினர். முதல்வர் அதை அன்போடு பெற்று சாப்பிட்டார்.  அப்போது அருகிலிருந்த சிறுமிக்கும் அவர் இட்லி ஊட்டினார். மாணவி திவ்யாவின் வீட்டில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.  முன்னதாக நரிக்குறவ மாணவிகள் அவருக்கு பாசி மாலை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.  அது அனைத்தையும் மகிழ்ச்சியுடன் அவர் ஏற்றுக் கொண்டார். பின்னர் அவர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். நரிக்குறவர் வீட்டில் அமர்ந்து முதலமைச்சர் உணவு அருந்தியது நரிக்குறவர் சிறுமிக்கு இட்லி ஊட்டியது உள்ளிட்ட வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  முதலமைச்சரின் இந்த செயலை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். 

நரிக்குறவர் இன மக்கள் மீது எம்.ஜி.ஆர். மிகுந்த அன்பு கொண்டவர். ‘ஒளி விளக்கு’ படத் தில் ‘நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க…’ பாடலில் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் நரிக்குறவர்கள் வேடத்தில் ஆடிப் பாடுவர். அந்தப் பாடல் காட்சியில் நடிப்பதற்காக நரிக்குறவர் இன மக்களை வரவழைத்து, அவர்களை ஆடச் சொல்லி கவனித்து எம்.ஜி.ஆர். பயிற்சி எடுத்துக் கொண்டார். ‘நவரத் தினம்’ படத்தில் ‘குருவிக்கார மச்சானே…’ பாடல் காட்சியிலும் நரிக்குறவர் வேடத்தில் நடித்திருப்பார்.

ஒருமுறை பொங்கல் நாளில் ஏராளமான நரிக்குறவர்கள் எம்.ஜி.ஆரை காண, அவரது ராமாவரம் தோட்டத்துக்கு வந்தனர். எம்.ஜி.ஆரை கண்டதும் உற்சாகக் கூச்சலிட்டனர். அவர் களை அருகே வருமாறு அழைத்த எம்.ஜி.ஆர்., கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவருக்கும் பணம் கொடுத்தார். அவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள், அவர் எவ்வளவோ தடுத்தும் அவரது காலில் விழுந்து வணங்கினர்.

நரிக்குறவர் இன மக்களை எந்தவித பேதமும் இல்லாமல் எம்.ஜி.ஆர். கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார். அவர்களது குழந்தைகளை வாங்கிக் கொஞ்சினார். சமூகத்தில் அடித்தளத்தில் இருக்கும் தங்கள் மீது அவர் காட்டிய பாசத்தையும் அன்பையும் பார்த்து வந்தவர்கள் கண்கலங்கினர். 

இப்படி எம்ஜிஆருக்கு பிறகு அடித்தட்டு மக்களான நரிக்குறவ மக்களிடம் அன்பையும், பாசத்தையும் காட்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நரிக்குறவ மக்கள் மனதில் இன்னொரு MGR ஆக அவதாரமெடுத்திருக்கிறார் என்றால் மிகையில்லை.



Ahamed

Senior Journalist

Previous Post Next Post