தூத்துக்குடியில் நேற்று ஒரே நாளில் 9 பேர் குண்டர் சட்டத்தில் கைது.!


தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை குற்றத்தில் ஈடுபட்ட 9 எதிரிகள் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்   பாலாஜி சரவணன்  பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ்  உத்தரவு - இந்த ஆண்டு இதுவரை 71 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்

கடந்த 15.03.2022 அன்று தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிலுவைபட்டி கடற்கரையில் தூத்துக்குடி டி.எம்.பி காலனியை சேர்ந்த கந்தசாமி மகன் ரத்தினசாமி (38) என்பவரை கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி ஜெய்லானி தெருவை சேர்ந்தவர்களான 

லாரன்ஸ் மகன் 1) மகேஷ்குமார் (42), அவரது மகன் 2) டேனியல் ராஜ் (22), ஏரல் ராஜபதி பகுதியை சேர்ந்த ரூபன் மகன் 3) முத்துக்குமார் (28) மற்றும் தூத்துக்குடி பாகம்பிரியாள் தெருவை சேர்ந்த சையது இப்ராஹிம் மகன் 4) முஹம்மது காசிம் (21) ஆகிய 4 பேரையும் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். 

மேற்படி இவ்வழக்கின் எதிரிகளான மகேஷ்குமார், முத்துக்குமார், டேனியல்ராஜ், மற்றும் முகமது காசிம் ஆகிய 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி அவர்களும்,

கடந்த 24.03.2022 அன்று தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதிய பேருந்து நிலைய வளாகத்தில் புதுக்கோட்டை கீழே கூட்டுடன்காடு பகுதியைச் சேர்ந்த நெல்லையப்பன் மகன் முத்துப்பாண்டி (45) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் 

புதுக்கோட்டை அய்யனார் காலனி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் 1) லட்சுமணன் (26) , தூத்துக்குடி கே.டி.சி நகர் பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் 2) கருப்பசாமி (எ) கருப்பு (25), தூத்துக்குடி பாலதண்டாயுத நகர் பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் 3) சண்முகவிக்னேஷ் (எ) விக்கி (26), தூத்துக்குடி மகிழ்ச்சிபுரம் பகுதியை 

சேர்ந்த சொக்கலிங்கம் மகன் 4) செல்வகணேஷ் (22) மற்றும் புதுக்கோட்டை கீழகூட்டுடன்காடு அய்யனார் காலனி பகுதியை சேர்ந்த சங்கர் மகன் 5) முருகன் (எ) குட்டையன் (22) ஆகிய 5 பேரையும் வடபாகம் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். 

மேற்படி இவ்வழக்கின் எதிரிகளான லட்சுமணன், கருப்பசாமி (எ) கருப்பு, சண்முக விக்னேஷ் (எ) விக்கி, செல்வகணேஷ் மற்றும் முருகன் (எ) குட்டையன் ஆகிய 5 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ரபி சுஜின் ஜோஸ் அவர்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.

மேற்படி காவல் ஆய்வாளர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் டாக்டர். செந்தில்ராஜ் தூத்துக்குடி ஜெய்லானி தெருவை சேர்ந்தவர்களான லாரன்ஸ் மகன் 1) மகேஷ்குமார், அவரது மகன் 2) டேனியல்ராஜ், ஏரல் ராஜபதி பகுதியை சேர்ந்த ரூபன் மகன் 3) முத்துக்குமார், தூத்துக்குடி பாகம்பிரியாள் தெருவை சேர்ந்த செய்யது இப்ராஹிம் மகன் 4) முஹம்மது காசிம், 

புதுக்கோட்டை அய்யனார் காலனி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் 5) லட்சுமணன், தூத்துக்குடி கே.டி.சி நகர் பகுதியை சேர்ந்த பழனிசாமி மகன் 6) கருப்பசாமி (எ) கருப்பு, தூத்துக்குடி பாலதண்டாயுத நகர் பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் 7) சண்முகவிக்னேஷ் (எ) விக்கி,  தூத்துக்குடி மகிழ்ச்சிபுரம் பகுதியை சேர்ந்த சொக்கலிங்கம் மகன் 8) செல்வகணேஷ் மற்றும் புதுக்கோட்டை கீழகூட்டுடன்காடு அய்யனார் காலனி பகுதியை சேர்ந்த சங்கர் மகன் 9) முருகன் (எ) குட்டையன் ஆகிய 9 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். 

அவரது உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் மேற்படி எதிரிகள் 9 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

இந்த ஆண்டு இதுவரை போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை வழக்கில் ஈடுபட்ட 22 பேர்  உட்பட  மொத்தம் 71 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post