பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் 99வது விளையாட்டு விழா

 நெல்லை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் 99வது விளையாட்டு விழா கல்லூரி மைதானத்தில் வைத்து நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர்  முனைவர் மரியதாஸ்  வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப் கலந்து கொண்டு ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்து விளையாட்டு விழாவினை துவக்கி வைத்தார். தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். தூய சவேரியார் கலை மனைகளின் அதிபர்  முனைவர் ஹென்றி ஜெரோம் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்து தலைமை தாங்கினார். கல்லூரி செயலர்  முனைவர் அல்போன்ஸ் மாணிக்கம் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் கௌரவ விருந்தினராக பாளையங்கோட்டை காவல் துறை புலனாய்வு பிரிவு உதவி ஆணையாளர் நாக சங்கர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் மைக்கேல்ராஜ் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி பேராசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவிகள் செய்திருந்தனர்.



Attachments area
Previous Post Next Post