தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புகையிலை பொருட்களை விற்பனைக்காக காரில் கடத்தியவர் கைது - ரூபாய் 75,000/- மதிப்புள்ள 90 கிலோ புகையிலை பொருட்கள், கடத்துவதற்கு பயன்படுத்தப்ட்ட கார் மற்றும் ரூபாய் 12,500/- பணம் பறிமுதல் செய்தனர்.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் சத்யா மற்றும் போலீசார் நேற்று எட்டையாபுரம் ரோடு பகுதியிலுள்ள பெட்ரோல் பல்க் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது,
அங்கு சந்தேகத்திற்க்கிடமான முறையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் கோவில்பட்டி மந்திதோப்பு பகுதியை சேர்ந்த ராமசந்திரன் மகன் பூ மாரியப்பன் (32) என்பவர் காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக கடத்தியது தெரியவந்தது.
உடனே போலீசார் பூ மாரியப்பனை கைது செய்து அவரிடமிருந்து ரூபாய் 75,000/- மதிப்புள்ள 90 கிலோ புகையிலை பொருட்களையும், கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட TN 07 BE 8527 (Tata Manza) என்ற கார் மற்றும் 12,500/- ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பூ மாரியப்பன் மீது ஏற்கனவே சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் ஓரு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.