தூத்துக்குடி துறைமுகம் 7.81 லட்சம், சரக்கு பெட்டிகளை கையாண்டு சாதனை - முந்தைய ஆண்டை விட 2.49% அதிகரிப்பு.!


உலகளவில் கொரோனா தொற்றால் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் இந்த சாதனை படைக்கப்பட்டு உள்ளது. 

கொரோனா தொற்றின் காரணமாக உலகளாவிய தொழில் துறை வர்த்தகத்தில் நம்பிக்கை ஏற்படும் வகையில் அக்டோபர் 2020 முதல் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் கையாளப்படும் சரக்குகளின் அளவு மெதுவாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தென்னிந்தியாவின் பொருளாதார எந்திரமாக செயல்பட்டு வரும் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் கடந்த 2020-2021 நிதியாண்டில் 7.62 லட்சம் சரக்கு பெட்டகங்களை (TEUs) கையாண்ட நிலையில் 2021-2022 நிதியாண்டில், 7.81 லட்சம், சரக்கு பெட்டகங்களை (TEUs) கையாண்டு முந்தைய ஆண்டை விட 2.49% சதவீதம் கூடுதலாக கையாண்டு சாதனை படைத்துள்ளது.

தூத்துக்குடி வஉசி துறைமுகம், ஒட்டு மொத்த சரக்கு கையாளுதலிலும் முந்தைய நிதியாண்டின் சாதனையான 31.79 மில்லியன் டன்களை தாண்டி நடப்பு 21-22 நிதியாண்டில் 34.12 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு, 7.33% வளர்ச்சி பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

இதன் மூலம் இந்திய பெருந்துறைமுகங்களில் சரக்கு பெட்டகம் மற்றும் சரக்குகளை கையாளுவதில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 3-ம் இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சாதனையை படைக்க காரணமாக இருந்த அனைத்து சரக்கு பெட்டக முனையத்தை இயக்குபவர்கள், துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அயராது உழைக்கும் தொழிலாளர்கள் அனைவரையும் வ.உ.சி. துறைமுக பொறுப்பு கழக தலைவர் ராமசந்திரன் பாராட்டினார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post