அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். 7.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விளக்கம் அளித்தார். அப்போது உரையாற்றிய அவர், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ரூ.74 கோடி கட்டணச் சலுகையை அரசே ஏற்றது. பொறியியல், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து தொழில் படிப்புக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டை அரசு விரிவு செய்தது என்று குறிப்பிட்டார்.