தென் மாநிலங்களின் பல பகுதிகளில் திடீர் மின் தடை : மத்திய தொகுப்பில் ஏற்பட்ட 750 MW பற்றாக்குறை என அமைச்சர் விளக்கம்.!

தென் மாநிலங்கள் முழுவதும் கடந்த சில மணி நேரங்களாக திடீர் மின் தடை ஏற்பட்டது, இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாயினர். சில மணி நேரங்கருக்குப் பிறகு இது சரி செய்யப்பட்டது. 

இது குறித்து தமிழக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில்..

"இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 MW திடீரென தடைபட்டது. இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும், தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.  

இதனால் நகர்பபுறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்

Ahamed

Senior Journalist

Previous Post Next Post