முன்னாள் அமைச்சரும்,கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ. செங்கோட்டையன் அவர்களின் ஆலோசனையின் பேரில் ஈரோடு மாவட்டம். நம்பியூர் பேரூராட்சி 7-வது வார்டில் இலவச மானிய கேஸ் சிலிண்டர் இரண்டாம் கட்டமாக 3 நபர்களுக்கு நம்பியூர் அதிமுக ஒன்றிய செயலாளரும் 7வது வார்டு உறுப்பினருமான தம்பி (எ) கே.ஏ.சுப்பிரமணியம் பரிந்துரையின்பேரில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. அருகில்பேரூராட்சி கழக செயலாளர் கருப்பண கவுண்டர், எலத்தூர் பேரூராட்சி கழகச் செயலாளர் சேரன் சரவணன் , 12வது வார்டு உறுப்பினர் மற்றும் வார்டு செயலாளர் சரவணன், வார்டு செயலாளர் மாரிமுத்து, தகவல் தொழில்நுட்ப செயலாளர் திவாகரன் மற்றும் அருண்குமார், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் மனோகரன், கழக மேலவை பிரதிநிதி சக்திவேல், மற்றும் ஆறுமுகம், செந்தில்குமார், குமரேசன், கருணாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.