670 பயணிகள் ரயில்கள் ரத்து..*


நிலக்கரி தேவையை சமாளிக்க கூடுதலாய் சரக்கு ரயில்களை இயக்குவதற்காக ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை.

நாடு முழுவதும் மே 24ஆம் தேதி வரை இந்த ரத்து இருக்கும்... என தகவல்

அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி கொண்டு செல்லும் வகையில் 670 நடைகள், பயணிகள் ரயில் சேவையை ரயில்வே ரத்து செய்துள்ளது.

கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், இந்தியா முழுவதும் மின்சார தேவை அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், அனல் மின்நிலையங்களில் போதிய நிலக்கரி இல்லை. இதை கவனத்தில் கொண்டு, விரைவாக நிலக்கரியை எடுத்துச் செல்லும் வகையில், சில எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. அதன்படி, கடந்த நாட்களில் 670 நடைகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில்வே சார்பில் நாள்தோறும் 400க்கும் அதிகமான பெட்டிகள் மூலம் நிலக்கரி விநியோகிக்கப்பட்டு வருகிறது. அனல்மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பை உறுதி செய்யும் அடுத்த இரு மாதங்களுக்கு இந்த சேவை தொடரும் என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

Previous Post Next Post