காயல்பட்டினத்தில் ரத்த தான முகாம் - 6 பெண்கள் உட்பட 44 பேர் ரத்த தானம்.!


காயல்பட்டினம் கொம்புத்துறை  கடையக்குடி பகுதியில் அமைந்துள்ள கொம்புத்துறை ஊராட்சி ஒன்றியபள்ளிக்கூடம் வளாகத்தில் வைத்து, இன்று (ஏப்ரல் 10) சிறப்பு குருதிக்கொடை முகாம் (BLOOD DONATION CAMP) நடைபெற்றது.

காலை 10 மணி துவங்கி மதியம் 1:30 வரை நடந்த இந்த முகாமினை, மக்கள் உரிமை நிலைநாட்டல் & வழிகாட்டு அமைப்பு (மெகா) மற்றும் கொம்புத்துறை இளைஞர்கள் இணைந்து,  திருச்செந்தூர் அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்காக ஏற்பாடு செய்திருந்தனர்.

அருட்தந்தை பிரதீஸ் அகற்றார் இந்த முகாமினை துவக்கி வைத்தார். கொம்புத்துறை ஊர் நலக்குழு தலைவர் போர்தாஸ், ஊர் நலக்குழு நிர்வாகிகள், மெகா அமைப்பின் நிர்வாகிகள்  முன்னிலை வகித்தார்கள். 


6 பெண்கள் உட்பட 44 பேர் இந்த முகாமில் குருதிக்கொடை செய்தார்கள். இதில் பெருவாரியானவர்கள், முதல் முறையாக குருதிக்கொடை செய்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) வழிகாட்டுதலான மக்கள் தொகையில் குறைந்தது ஒரு சதவீதத்தினர் குருதிக்கொடை செய்தால், மருத்துவத்துறையில் குறுதித்தேவை பூர்த்தி அடையும்_ என்ற இலக்கோடு மெகா அமைப்பு, கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், நகரில் தொடர்ந்து குருதிக்கொடை முகாம்களை நடத்தி வருவது அனைவரும் அறிந்தது.

இதுவரை மெகா அமைப்பு ஏற்பாடு செய்துள்ள 18 முகாம்கள் மூலம், 1251 கொடையாளர்கள் குருதிக்கொடை செய்துள்ளனர்; இதில் 190 பெண்களும் அடங்கும்.

Previous Post Next Post