தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் கோகிலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் செல்வம் (42) இவர் மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடந்த 15 - ம் தேதியன்று வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றவர் மறுநாள், ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சியின் போது கூட்ட நெரிசலில் சிக்கி இறந்ததாக கூறப்படுகிறது. இறந்தவருக்கு சந்திரா என்ற மனைவியும்,16வயதில் ஹர்சினி,என்ற ஒரு பெண் குழந்தையும் 7 வயதில் சுவிசன் என்ற ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர்.
மதுரையில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சியில் உயிரிழந்த குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் வழங்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், 5 லட்சத்திற்கன காசோலையை நேற்று தேனி மாவட்ட கலெக்டர் க.வீ.முரளீதரன், கோகிலாபுரம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று அவரது மனைவி சந்திராவிடம் காசோலையை வழங்கினார். உடன் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி கௌசல்யா, வட்டாட்சியர் அர்ஜுனன் ஆகியோர் உள்ளனர்.