மதுரை கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தேனி கலெக்டர் ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கினார்.


தேனி, ஏப்ரல் - 18

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் கோகிலாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் செல்வம் (42) இவர் மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள  கடந்த 15 - ம் தேதியன்று வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றவர் மறுநாள்,ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சியின் போது

கூட்ட நெரிசலில் சிக்கி  இறந்ததாக கூறப்படுகிறது. இறந்தவருக்கு சந்திரா என்ற மனைவியும்  16 வயதில் ஹர்சினி என்ற ஒரு பெண் குழந்தையும்  7  வயதில் சுவிசன் என்ற ஒரு ஆண் பிள்ளையும் உள்ளனர்.

மதுரையில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சியில் உயிரிழந்த குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் வழங்க தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், 

5 லட்சத்திற்கன காசோலையை இன்று தேனி மாவட்ட கலெக்டர் க.வீ.முரளீதரன், கோகிலாபுரம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று அவரது மனைவி சந்திராவிடம் காசோலையை வழங்கினார்.

உடன் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் செல்வி கௌசல்யா, வட்டாட்சியர் அர்ஜுனன் ஆகியோர் உள்ளனர்.

ரா.சிவபாலன்

தேனி மாவட்ட செய்தியாளர்....

Previous Post Next Post