தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு மாரியம்மனுக்கு ரூ.5 கோடி பணத்தில் அலங்காரம்!

தமிழ்நாடு முழுவதும் சித்திரை முதல்நாளான இன்று தமிழ்ப்புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

 கோவை காட்டூரில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால்,  அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதற்காக 5 கோடி  ரூபாய் நோட்டுகள் அம்மன் மீதும், கோவில் கருவறை சுவற்றிலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பண அலங்காரம் மற்றும் தங்கம், வைர நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.  5 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகளுடன் ஜொலித்த மாரியம்மனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தார்கள்.

இதே போல திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவிலிலும் ரூபாய்நோட்டு அலங்காரம் செய்யப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் இங்கிருந்து பல்வேறு பகுதிகளுக்கு தீர்த்தக்குடம் எடுத்துக் கொண்டு பக்தர்கள் ஊர்வலமாக சென்று தங்கள் பகுதிகளில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்கள்.

சித்திரை முதல் நாளை முன்னிட்டு, பலரும் தங்கள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் பணப்பரிசு அளித்து மகிழ்ந்தனர். 

Previous Post Next Post