தாளவாடி அருகே வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் : 500 வாழைகள் சேதம்

 ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே வாழைத் தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் செய்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி,ஆசனூர்,கேர்மாளம்,ஜீரகள்ளி,தலமலை உள்ளிட்ட வனப்பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன.இங்கு வசிக்கும் காட்டு யானைகள் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் விவசாய நிலங்களுக்குள் நுழைவதும், விவசாய பயிர்களை சேதம் செய்தும் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் ஜீரகள்ளி வனச்சரகதுக்கு உட்பட்ட எரகனள்ளி கிராமத்தை சேர்ந்த ரத்தினம்மா என்பவரது தோட்டத்துக்குள் நேற்று இரவு புகுந்த காட்டுயானைகள் அவரது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த குழை தள்ளிய நிலையில் இருந்த 500க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதம் செய்தன. இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சேதமடைந்த வாழைகளுக்கு அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும்,யானைகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறுவதை தடுக்க வனப்பகுதியை சுற்றி ஆழமான அகழி தோண்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.



Attachments area
Previous Post Next Post