தூத்துக்குடி நகை கடையில் சுவற்றில் ஓட்டை போட்டு வெள்ளி நகைகள் திருட்டு - 4 மணி நேரத்தில் திருடனை கண்டுபிடித்த போலீசார்.!


தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நகை கடையின் சுவற்றில் ஓட்டைபோட்டு வெள்ளி பொருட்கள் திருட்டு - சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  டாக்டர் பாலாஜி சரவணன்  நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை செய்தார்.

புகார் அளித்த 4 மணி நேரத்தில்  இளஞ்சிறார் உட்பட 4 பேர் கைது - ரூபாய் 1, 88,500/- மதிப்புள்ள 3 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்பு - கைது செய்த தென்பாகம் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.


தூத்துக்குடி பிரையண்ட் நகர் சாந்தி நகர் பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் முருகன் (60) என்பவர், தூத்துக்குடி சிதம்பரம்நகர் அம்மன் கோவில் தெருவில் தங்கம் மற்றும் வெள்ளி நகைக்கடை வைத்துள்ளார். 

மேற்படி நகை கடையில் நேற்று இரவு கடையின் சுவற்றில் ஓட்டைபோட்டு உள்ளே நுழைந்த மர்மநபர்கள் கடையில் இருந்த ரூபாய் 1,88,500/- மதிப்புள்ள 3 கிலோ வெள்ளி பொருட்களை திருடி சென்றுள்ளனர். 


இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலாஜி சரவணன்  சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பளார் 


(பொறுப்பு) பாலாஜி அவர்களுக்கு எதிரிகளை விரைந்து கைது செய்து திருடுபோன வெள்ளி பொருட்களை மீட்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அவரது உத்தரவின்பேரில்  தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையில் போலீசார்  ஆகியோர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், 

தூத்துக்குடி லோகியா நகர் பகுதியைச் சேர்ந்த மாடசாமி மகன் 1) முனியசாமி  (எ) குட்டி (24), தூத்துக்குடி லெவிஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெரியநாயகம் மகன் 2) சுடலையாண்டி (29), தூத்துக்குடி பிரையண்ட் நகரைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன் மகன் 3) சதீஷ் (எ) மோசஸ் (20)


மற்றும் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த இளஞ்சிறார் ஒருவர் ஆகிய 4 பேரும் மேற்படி நகை கடைக்குள் சுவற்றில் ஓட்டை போட்டு உள்ளே நுழைந்து வெள்ளி பொருட்களை திருடியது தெரியவந்தது.

உடனே மேற்படி போலீசார் எதிரிகள் முனியசாமி (எ) குட்டி, சதீஷ் (எ) மோசஸ், சுடலையாண்டி மற்றும் இளஞ்சிறார் ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 1,88,500/- மதிப்புள்ள 3 கிலோ வெள்ளி பொருட்களை மீட்டனர்.


மேற்படி நகை கடையில் வெள்ளி பொருட்களை திருடிய இளஞ்சிறார் உட்பட 4 பேரையும் புகார் அளித்த 4 மணி நேரத்தில் கைது செய்து திருடுபோன வெள்ளி பொருட்களை மீட்ட தென்பாகம் காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன்  பாராட்டினார்.

Previous Post Next Post