பல்லாவரம் வட்டாச்சியர் அலுவலகம் அருகே 4050 சதுர அடி கொண்ட நிலத்தை ஆக்கிரமிப்பை அகற்றி மீட்ட அரசு அதிகாரிகள்,பாதுகாப்பிற்க்காக ஏராளமான போலிசார் குவிக்கபட்டனர்.
சென்னை அடுத்த குரோம்பேட்டை ஐஸ்வர்யா நகர் பகுதியில் அமைந்துள்ளது பல்லாவரம் வட்டாச்சியர் அலுவலகம் இதன் அருகே அரசுக்கு சொந்தமான 4050 சதுர அடி கொண்ட புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து பல வருடங்களாக வீடுகட்டி தங்கியுள்ளார்.
இதனை பலமுறை வட்டாச்சியர் அலுவலக அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நிலங்களை அகற்றுமாறு கேட்டுகொண்டனர், ஆக்கிரமிப்பாளர் இதனை மறுக்கவே வட்டாசியர் அலுவலக அதிகாரிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டு அகற்றுவதற்க்கான ஆணை பிறபிக்கபட்டது.
இந்நிலையில் ஆக்கிரமிப்பாளரிடம் அகற்றுவதற்க்கான உத்தரவை காண்பித்து மீண்டும் அகற்றுபடி கேட்டு கொண்டனர் ஆக்கிரமிப்பாளர் மறுக்கவே இன்று காலை பல்லாவரம் வட்டாச்சியர் ராஜா தலைமையில் வருவாய்துறை, நில அளவை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் இரண்டு ஜேசிபி இயந்திரங்களை கொண்டு தனியார் ஆக்கிரமித்த 4050 சதுர அடி நிலத்தை இடித்து ஆக்கிரமிப்பு அகற்றபட்டது. பாதுகாப்பிற்க்காக ஏராளமான போலிசார் குவிக்கபட்டனர்.