குடிநீர் பிரச்சினை தீர்க்கக் கோரி40 வது வார்டு பகுதி பொதுமக்கள், கவிக்குமார் தலைமையில் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 40-வது வார்டு பொதுமக்கள் பெண்கள் உட்பட சுமார் 30 பேர் திரண்டு திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். கமிஷனர் இல்லாததால் அவர்கள் கமிஷனராக முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது அவர்கள் கூறுகையில்: திருப்பூர் மாநகராட்சி 40வது வார்டுக்குட்பட்ட மகாலட்சுமி நகரில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிகளில் 10 நாட்களுக்கு மேல் ஆன பிறகுதான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். குடிநீர் வரும்போதும் மிக மெதுவாகவே வருகிறது. போதுமான அளவு தண்ணீர் கிடைப்பதில்லை. அதை இங்கு மனு கொடுப்பதற்காக வந்தோம். கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் யாரும் இல்லை. அதிகாரிகள் வந்து எங்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக உறுதி அளிக்கும் வரை இங்கு உட்கார்ந்து போராடுகிறோம். என்று தெரிவித்தார்கள்