தொமேசியன் கோப்பைக்கான மாவட்ட அளவிலான 3ம் ஆண்டு மின்னொளி கூடைப்பந்து போட்டி.! - செயின்ட் தாமஸ் பள்ளி அசத்தல் வெற்றி!!


தொமேசியன் அகடமி மற்றும் செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும் இனைந்து நடத்திய 10வயது மற்றும் 13வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ , மாணவியர்களுக்குரிய மாவட்ட அளவிலான 3ம் ஆண்டு மின்னொளி கூடைப்பந்து போட்டி  கடந்த 8ம் தேதி முதல் 11ம் தேதி வரையில் செயின்ட் தாமஸ் ஆங்கிலப் பள்ளி வளாகத்தில் பிரமாண்டமான முறையில் ஓர் விளையாட்டு திருவிழாவாகவே நடைபெற்றது.

இப்போட்டிகளில் 10 வயதுக்குரிய மாணவ மாணவியர்கள் பிரிவில் தலா 13 அணிகளும், 13 வயதுக்குரிய மாணவர்கள் பிரிவில் தலா 8அணிகளும் பங்கு பெற்று சிறப்பித்தனர். மேலும் தமிழ்நாடு கூடை பந்து கழகம் நடத்திய மாநில அளவிலான யூத் சேம்பியன் சிப் போட்டியில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று முதலிடம் பிடித்த தூத்துக்குடி மாவட்ட மாணவர் அணிகளுக்கும், மூன்றாம் இடம் பிடித்து சாதித்த தூத்துக்குடி மாவட்ட மாணவியர் அணிகளுக்கும் தனித்தனியே கண் கவர் காட்சிப் போட்டி செயின்ட் தாமஸ் பள்ளி மைதானத்தில் நடத்தப்பட்டு , இரு அணிகளுக்கும் விருதுகள்  வழங்கியும் , பாராட்டியும் கொளரவப்படுத்தப்பட்டார்கள். 

தொமேசியன் கோப்பைக்கான அனைத்து போட்டிகளையும் செயின்ட் தாமஸ் பள்ளி தாளாளர் அருட்தந்தை ராயப்பன் மற்றும் பள்ளி முதல்வர் ஆஸ்கர் விளையாட்டு வீரர்களை ஆசீர்வதித்து போட்டிகளை துவக்கி வைத்தார். தூத்துக்குடி வடபாகம் காவல் உதவி ஆய்வாளர் சிவராஜன் மற்றும் மூத்த பயிற்சியாளரும், தேசிய கூடை பந்து நடுவருமான வீ. சத்திய சங்கர் மற்றும் தொமோசியன் கோப்பைக்கான போட்டியை ஒருங்கிணைத்து,  மாபெரும் வெற்றிச் சரித்திரம்  படைத்த அகடமியின் ஒருங்கினைப்பாளர் வேல்ராஜ் ஆகியோரும் முன்னிலை வகித்தனர். 

போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுகான அணிகள் அனைத்திற்க்கும் பரிசளிப்பு விழா நிகழ்ச்சிகள் 11/04/2022 அன்று செயின்ட் தாமஸ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றிச் சாதனைகளை படைத்த அணிகள் தொமோசியன் கோப்பைகளை வெற்றிப் பரிசாகப் பெற்றது. இதில் செயின்ட் தாமஸ் , கிரசன்ட்  , ஹோலி கிராஸ் ஆங்கில இந்தியன் பள்ளி, விகாசா , KVS  மற்றும்  லசால் பள்ளிகளுக்கு தொமோசியன் வெற்றி கோப்பைகளும் , தனி நபர் பரிசுகளும் , சான்றிதழ்களும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

3ம் ஆண்டு கூடை பந்து போட்டி திருவிழாவில் பங்கு பெற்ற அனைத்து பள்ளிகளை சார்ந்த அணிகளுக்கும் தனி நபர் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி கொளரவிக்கப்பட்டது.  

போட்டிகள் அனைத்தும் முடிந்து பரிசளிப்பு விழா நடைபெறுவதற்கு முன் மைதானத்தில் அமர்ந்து இருந்த மாணவ , மாணவியர்களின் பெற்றோர்கள் மற்றும் கூடை பந்து ரசிக பெரு மக்களுக்கு என ஓர் சிறப்பு கூடை பந்து போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு என தொமோசியன் அகடமி சார்பாக சிறப்பு பரிசுகளும்  வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இதனால் அனைவரும் மகிழ்ச்சி ஆரவாரத்தில் திகைத்து இருந்தனர். 

பரிசளிப்பு விழா நிகழ்ச்சிகளில் பள்ளித் தாளாளர் அருட்தந்தை ராயப்பன் மற்றும் பள்ளி முதல்வர் ஆஸ்கர் மற்றும் ஒருங்கினைப்பாளர் திரு. வேல்ராஜ் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு வாழ்த்துக்களையும் நல் ஆசிகளையும் வழங்கி தங்களது பொற்கரங்களால் கோப்பைகள் தனி நபர் பரிசுகள் , சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்கள்.

வெற்றி பெற்ற 10வயதுக்கு உட்பட்ட  மாணவர்களுக்கான  முதல் மூன்று பரிசுகளை சத்யா ஏஜென்சிஸ் நிறுவனர் ஜாண்சனும் , மாணவியர்களுக்கான முதல் நான்கு பரிசுகளை சாம்சன் தங்கராஜ்ம் மற்றும் மாமன்ற உறுப்பினர் சரண்யா ராஜ்குமார் மேலும் 13வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான முதல் நான்கு பரிசுகளை உமா ஜீவல்லர்ஸ் உரிமையாளர் சரவணனன்,

மாநில அளவில் முதல் இடத்தை பிடித்த தூத்துக்குடியை சேர்ந்த  16வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கும் , மூன்றாம் இடத்தை பிடித்த மாணவியர்களுக்கான நினைவு பரிசுகளை எப்போதும் வென்றான் வெங்கடேஸ் ஆகியோர்கள் தொமோசியன் கோப்பைக்கான பரிசுகளை வழங்கினர்.

மேலும் இப்போட்டி சிறப்பாக நடைபெற அனுமதி அளித்த  தூத்துக்குடி மாவட்ட கூடை பந்து கழகத்திற்கும் ,தமிழ்நாடு கூடை பந்து கழக துணைத்தலைவர் பாலமுருகன் மற்றும் யெங்ஸ்டார் கூடை பந்து கழகத்தின் செயலாளர் சுந்தர மகாராஜன் நல்லவிதமான ஒத்துழைப்பை மனமுவந்து தந்து உதவிய சென்ட் தாமஸ் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் அவர்களுக்கும், இப்போட்டிகள் நடைபெற  ஆதரவு அளித்த அனைத்து சிறப்பு நன்கொடையாளர்களுக்கும் ,

போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்கள் , பெற்றோர்கள் மற்றும் கூடை பந்து பயிற்சியாளர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் உள்ப்பட கூடைபந்து ரசிகர் பெருமக்கள் அனைவருக்கும் செயின்ட் தாமஸ் பள்ளி கூடை பந்து பயிற்சியாளர் பொன்மாரியப்பன், மேலும் தொமோசியன் அகாடமியை சேர்ந்த இ.துரைராஜ் அவர்களுடன்  பெற்றோர்களும் ஒன்றினைந்து  நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post