சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கம் 252வது பிறந்த நாள் விழா- கனிமொழி கருணாநிதி எம்.பி மாலை அணிவித்து மரியாதை.!*


தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் கவர்னகிரியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கம் அவர்களின் மணிமண்டபத்தில் அன்னாரது 252வது பிறந்த நாள் விழாவில் 

அன்னாரது உருவ சிலைக்கு  தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன்,  மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், 

சட்


டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, மார்கண்டேயன்  மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் மரு.கண்ணபிரான், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். 

தமிழ்நாடு முதலமைச்சர்  சுதந்திர போராட்ட வீரர்களின் பெருமையை போற்றும் வகையில், அரசின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மணிமண்டபம் அமைத்தல், தலைவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடுதல், 


தியாகிகளின் வாரிசுதார்களை கௌரவித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அவர்களின் தியாகங்களை இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில்  மேற்கொண்டு வருகிறார்கள். 

இன்று நடைபெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கம் அவர்களின் பிறந்த நாள் விழாவில் கவர்னகிரி கிராமத்தை சேர்ந்த  மக்கள் 187 பேருக்கு ரூ.21.50 இலட்சம் மதிப்பில் ஆதிதிராவிடர்  நத்தம் பட்டாவும், 

10 நபர்களுக்கு தலா ரூ.1000 வீதம் முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை ரூ.10,000, 2 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டையும்  தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி  வழங்கப்பட்டது.

நடைபெற்ற விழாவில் கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ரமேஷ், துணைத்தலைவர் காசி விஸ்வநாதன், 

மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் செல்வக்குமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செல்வலெட்சுஷ்மா, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் நிஷாந்தினி, ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேவராஜ், 

ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் கனகரத்தினம், ஊராட்சி மன்ற தலைவர் ஜேம்ஸ், துணைத்தலைவர் லெட்சுமி, வீரன் சுந்தரலிங்கம் அவர்களின் வாரிசு பொன்ராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Previous Post Next Post