மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், திரேஸ்புரம் பகுதியில் ரூபாய் 21 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்கு தளத்தினை மேம்படுத்துவதற்கான பணிகளையும், மற்றும்
தெர்மல்நகர் பகுதியில் உள்ள மீனவர் காலனியில் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை வசதிகளுடன் மீன்ஏலக்கூடம் அமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது
நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் சமூக நலன் மற்றும் மகளிர் நலத் துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக மகளிர் அணிச் செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, துணைமேயர் செல்வராஜ், வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், தெற்கு மண்டல தலைவர் பாலகுருசாமி,
மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரி சங்கர், மாநில மீனவர் அணி துணை செயலாளர் துறைமுகம் புளோரன்ஸ், மாவட்ட மீனவர் அணி செயலாளர் அந்தோணி ஸ்டாலின்,மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ்,
தலைமை செயற்குழு உறுப்பினர் பில்லா ஜெகன், தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம், மாவட்ட சுற்றுச்சூழல் அணி செயலாளர் ஜெபசிங், மாமன்ற உறுப்பினர்கள் பவானி மார்சல், செபஸ்டின் சுதா, ஜெயசிலி,கீதாமுருகேசன்
வடபாகம் நாட்டுப்படகு மீனவர் சங்கத் தலைவர் ராபர்ட், மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல்சேவியர், உதவி இயக்குனர் வயோலா உதவி செயற்பொறியாளர் தயாநிதி உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.