இந்தியா : அதிகரிக்கும் இறக்குமதி.! -2019-20ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 275.53% அதிகம் என அரசு தகவல்.!

நாட்டில் நடப்பு ஆண்டில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அதிகரித்து உள்ளது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில், நடப்பு ஆண்டின் ஏப்ரல் முதல் வாரத்தில் ஏற்றுமதியின் மதிப்பு 932 கோடி அமெரிக்க டாலராக உள்ளது.  இது கடந்த 2020-21ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது (678 கோடி அமெரிக்க டாலர்) 37.57% அதிகம் ஆகும்.

இதேகால கட்டத்தில் 2019-20ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது (171 கோடி அமெரிக்க டாலர்) 295.81% அதிகம் ஆகும் என தெரிவித்து உள்ளது.  கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பெட்ரோலிய ஏற்றுமதி 24.32% அதிகரித்து உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.

இதேபோன்று, நடப்பு ஆண்டின் ஏப்ரல் முதல் வாரத்தில் இறக்குமதியின் மதிப்பு 1,054 கோடி அமெரிக்க டாலராக உள்ளது.  இது கடந்த 2020-21ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது (973 கோடி அமெரிக்க டாலர்) 8.29% அதிகம் ஆகும்.

இதேகால கட்டத்தில் 2019-20ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது (281 கோடி அமெரிக்க டாலர்) 275.53% அதிகம் ஆகும் என தெரிவித்து உள்ளது.  கடந்த ஆண்டுடன் (2020-21) ஒப்பிடும்போது பெட்ரோலிய இறக்குமதி 16.01% அதிகரித்து உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.

கொரோனா பெருந்தொற்றால் 2 ஆண்டுகளாக பெருமளவில் நாட்டில் ஏற்றுமதி, இறக்குமதி குறைந்திருந்தது.  இந்நிலையில், நடப்பு ஆண்டில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கடந்த இரு ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது பன்மடங்கு உயர்ந்து உள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post