கோவில்பட்டி நகரப்பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் - உணவுப்பாதுகாப்பு துறை ஆய்வு.!


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரப்பகுதியில் பள்ளி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

கோவில்பட்டி உணவுப்பாதுகாப்பு துறை அலுவலர் ஜோதிபாசு, கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த், உதவி ஆய்வாளர் சத்யா உள்ளிட்டோர்  கொண்ட குழுவினர் நகரப்பகுதியில் உள்ள கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

இதில், கோவில்பட்டி மெயின் சாலை, எட்டயபுரம் சாலை பசுவந்தனை சாலையில் பள்ளி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 


அதே போல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய 2 கடைகளுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், பிரதான சாலையில் உள்ள கடையில் திறந்த நிலையில், சுகாதார கேடு ஏற்படும் வண்ணம் வைக்கப்பட்டிருந்த 4 கிலோ வடைகள் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டன. 

மறுசுழற்சிக்கு பயன்பாடாத பிளாஸ்டிக் பைகள் கடைகளில் விற்பனை செய்யக்கூடாது. விற்பனை செய்யும் தின்பண்டங்களில் தயாரிப்பு தேதி உள்ளிட்டவைகள் குறிப்பிட்டிருக்க வேண்டும். திறந்த வெளியில் தின்பண்டங்களை வைத்து வியாபாரம் செய்யக்கூடாது. பள்ளி அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. இவற்றை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஜோதி பாசு எச்சரித்தார்.

Previous Post Next Post