கல்யாண சமையல் சாதம்... காய்கறிகளோ பிரமாதம்... மதுரை சித்திரைத் திருவிழாவில் 1 லட்சம் பேருக்கு மெகாவிருந்து!

 

மதுரை என்று சொன்னாலே, மதுரை மீனாட்சியும் மண் மணக்கும் மனிதர்களும் தான் நியாபகத்து வருவார்கள். உலகளவில் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சித்திரைத் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.  கடந்த 5ம் தேதி தொடங்கிய இந்த விழாவில் பக்தர்கள் பங்கேற்புடன் மீனாட்சி   சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

 இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கல்யாணத்தை கண்டு களித்தனர். 

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும்  திருக்கல்யாணத்தின் போது, பழமுதிர்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் சார்பில் சேதுபதி மேல் நிலை பள்ளியில் திருக்கல்யாண விருந்து நடைபெறு. 22 ஆண்டுகளுக்கு மேலாக  நடந்து வந்த இந்த விருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா பரவலால் பக்தர்களுக்கு விருந்து அளிக்கப்படவில்லை.

பக்தர்கள் பங்கேற்புடன் சித்திரைத் திருவிழா நட்ந்து வரும் நிலையில், பழமுதிர்சோலை திருவருள் முருக பக்தசபை சார்பில் ஒரு லட்சம் பேருக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதற்காக  மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில்  4 டன் அரிசி,   2 டன் காய்கறிகள், மற்றும் சமையல் பொருட்களைக் கொண்டு, மாபெரும் விருந்து தயாரிக்கப்பட்டது. இந்த விருந்தில் 200க்கும் மேற்ப்பட்டோர் விருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். 

மேலும் விருந்திருக்கும் வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க செல்ப் சர்வீஸ்  முறையில்  விருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை தொடர்ந்து, இந்த விருந்து நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலைகடலாக வந்து அறுசுவை விருந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர். 2 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் கண்ட மகிழ்ச்சியில், பக்தர்கள் கல்யாண விருந்தும் சாப்பிட்டு பரவசம் அடைந்தனர். 

Previous Post Next Post