நாட்டின் சில்லறை விலை பணவீக்கம் 17 மாதங்களில் இல்லாத அளவு அதிகரிப்பு.!

நாட்டின் சில்லறை விலை பணவீக்கம் 17 மாதங்களில் இல்லாத அளவு அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது

கடந்த மார்ச் மாதத்திற்கான விலைவாசி புள்ளிவிவரங்களை மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி மார்ச்சில் சில்லறை விலை பணவீக்கம் 6.95% ஆக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 17 மாதங்களில் இல்லாத உயர்ந்த அளவாகும். சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் விலை கடுமையாக அதிகரித்ததே பணவீக்க அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

பணவீக்கம் சமையல் எண்ணெய் பிரிவில் 18.8%, ஆகவும், காய்கறிகள் பிரிவில் 11.6% ஆகவும் இருந்தது. இறைச்சி மற்றும் காய்கறிகள் பிரிவில் பணவீக்கம் 9.6% ஆகவும், உடைகள் மற்றம் காலணிகள் பிரிவில் 9.4% ஆகவும் இருந்தது. போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு பிரிவில் பணவீக்கம் 8% ஆகவும், சுகாதாரப் பிரிவில் 7% ஆகவும் உயர்ந்திருந்ததாக புள்ளியியல் அமைச்சகம் கூறியுள்ளது.

கிராமப்புறங்களில் சில்லறை விலை பணவீக்கம் 7.7% ஆக இருந்த நிலையில் நகர்ப்புறங்களில் அது 6.1% ஆக மட்டுமே இருந்ததாக அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால் விலைவாசி அதிகரித்ததாக அரசு விளக்கம் அளித்துள்ளது. பணவீக்கம் வெகுவாக அதிகரித்துள்ளதால் நிலைமையை சமாளிக்க வங்கிக் கடன் வட்டி விகிதங்களை ரிசர்வ் வங்கி உயர்த்தும் எனத் தெரிகிறது

Ahamed

Senior Journalist

Previous Post Next Post