ஈரோடு மாவட்டத்தில் ரூ.16.02 கோடி மதிப்பீட்டில் 103 தடுப்பணைகள் - மாவட்ட கலெக்டர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி ஆய்வு

ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியம் பர்கூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் கட்டப்பட்டு வரும் தடுப்பணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி செய்தியாளர் பயணத்தின்போது பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


  இயற்கை வள மேம்பாட்டுப்பணி மற்றும் நீர்ப்பாதுகாப்பு பணிகளில் தடுப்பணை கட்டும் பணி ஒன்றாகும். தடுப்பணை கட்டும் பணியினை மேற்கொள்வதினால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாய நிலங்களுக்கு மிகவும் பயனள்ளதாக அமைகின்றது. ஈரோடு மாவட்டத்தில் 2021-2022 ஆம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் அம்மாபேட்டை வட்டாரத்தில் 285.50 இலட்சம் மதிப்பீட்டில் 16 தடுப்பணைகள் கட்டும் பணிகளுக்கும் ,  அந்தியூர் வட்டாரத்தில் 281.23 இலட்சம் மதிப்பீட்டில் 23 தடுப்பணைகள் கட்டும் பணிகளுக்கும் , பவானி வட்டாரத்தில் 112.70 இலட்சம் மதிப்பீட்டில் 9 தடுப்பணைகள் கட்டும் பணிகளுக்கும், கோபி வட்டாரத்தில் 90 இலட்சம் மதிப்பீட்டில் 4 தடுப்பணைகள் கட்டும் பணிகளுக்கும் கொடுமுடி வட்டாரத்தில் 8.43 இலட்சம் மதிப்பீட்டில் 2 தடுப்பணைகள் கட்டும் பணிகளுக்கும் , மொடக்குறிச்சி வட்டாரத்தில் 63 இலட்சம் மதிப்பீட்டில் 4 தடுப்பணைகள் கட்டும் பணிகளுக்கும்,  சென்னிமலை வட்டாரத்தில் 49.88 இலட்சம் மதிப்பீட்டில் 1 தடுப்பணைகள் கட்டும் பணிக்கும்,  நம்பியூர் வட்டாரத்தில் 133.92 இலட்சம் மதிப்பீட்டில் 14 தடுப்பணைகள் கட்டும் பணிகளுக்கும்,  பெருந்துறை வட்டாரத்தில் 43 இலட்சம் மதிப்பீட்டில் 4 தடுப்பணைகள் கட்டும் பணிகளுக்கும்  தாளவாடி வட்டாரத்தில் 446.67 இலட்சம் மதிப்பீட்டில் 21 தடுப்பணைகள் கட்டும் பணிகளுக்கும்,  தூக்கநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் 87.61 இலட்சம் மதிப்பீட்டில் 5 தடுப்பணைகள் கட்டும் பணிகளுக்கும் நிர்வாக அனுமதி பெற்று பணிகள் நடைபெற்று வருகின்றன. 

மொத்தம் 11 வட்டாரங்களில் ரூ.1601.95 இலட்சம் மதிப்பீட்டில் 103 தடுப்பணைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மலைப் பகுதியான அந்தியூர் வட்டாரம் பர்கூர் ஊராட்சியில் 21 தடுப்பணைகள் கட்டும் பணிகளும் மற்றும் தாளவாடி வட்டாரத்தில் 21 தடுப்பணைகள் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தார். இந்த ஆய்வின்போது  அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

Previous Post Next Post