திருப்பூரில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்.. 1500 மாணவ-மாணவிகள் பங்கேற்பு

திருப்பூர் காங்கயம் ரோடு, ஐ வின் டிராக் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான தடகள சாம்பியன் ஷிப் போட்டிகள் நடைபெற்றன. 

திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபாடி கழகத்தின் செயலாளர் ஜெயசித்ரா சண்முகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். திருப்பூர் கிரிக்கெட் பயிற்சி பள்ளி நிர்வாகி ரமேஷ்குமார், திருப்பூர் தடகள சங்க செயலாளரும், போலீஸ் இன்ஸ்பெக்டருமான பி.ஆர்.முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். 

இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டிகளில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் இருந்து 28 விளையாட்டு பயிற்சி மையங்கள், 20 பள்ளிகள் மற்றும் 3 கல்லூரிகளை சேர்ந்த 1500 மாணவ-மாணவிகள் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் பங்கேற்றார்கள்.  

20 வயதுக்கு மேல் அனைத்து வயதிருக்கான ஆண்கள் பிரிவில் ரைசிங் ஸ்டார் அகாடமியின் கார்த்திகேயனும், 20 வயதுக்கு மேல் அனைத்து வயதினருக்கான பெண்கள் பிரிவில் ஒலிம்பியான் அகாடமியை சேர்ந்த ஏஞ்சலினா சில்வியா ஆகியோர் சாம்பியனாக தேர்வானார்கள்.  20 வயதுக்குள்ளான ஆண்கள் பிரிவில் பிரேம் அகாடமியின் சுபாஷ், 20 வயதுக்குள்ளான பெண்கள் பிரிவில் ஒலிம்பியான் அகாடமியின் வைஷாலி ஆகியோர் வெற்றி பெற்றனர். 

18 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் ஐ வின் டிராக் ஸ்போர்ட்ஸ் கிளப் மாணவர் விஷ்னு ஸ்ரீ, 18 வயதுக்குட்ப்படோருக்கான பெண்கள் பிரிவில் ஐ வின் டிராக் ஸ்போர்ட்ஸ் ஸ்ரீவர்த்தினி, தீபிகா ஆகியோர் வெற்றி பெற்றனர். 

16 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் சந்திர ஆதித்யா, 16 வயதிற்க்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவில் ஒலிம்பியான் அகாடமியின் பவீனா ஆகியோர் வென்றனர்.

14 வயதுக்குட்பட்டோருக்கானஆண்கள் பிரிவில் ராக்போர்ட் அகாடமியின் ஜெயபிரனேஷ், பெண்கள் பிரிவில் ஆர்.ஜெ.மெட்ரிக் பள்ளியின் ஹன்ஷினி ஆகியோர் வெற்றி பெற்றனர். 

12வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் ராக்போர்ட் ஸ்டார் அகாடமியின் ஆண்டோ, பெண்கள் பிரிவில் வர்ஷிகா, ஷர்நிதா ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

5ம் வகுப்பு மாணவர்கள் பிரிவில் ஆர்.ஜெ.மெட்ரிக் அகிலேஷ், மாணவிகள் பிரிவில்  ஆர்.எஸ்.ஜி அகாடமி லயா ஆகியோர் வெற்றி பெற்றனர். 4ம் வகுப்பு மாணவர்கள் பிரிவில் மெளலி கார்த்திக், மாணவிகள் பிரிவில் ஸ்ரேயா ஸ்ரீ ஆகியோர் வெற்றி பெற்றனர். 3ம் வகுப்பு மாணவர்கள் பிரிவில் மிதுன், மாணவிகள் பிரிவில் அர்லென் ஜெனிதா ஆகியோர் சாம்பியன் ஆனார்கள். 2ம் வகுப்பு மாணவர்கள் பிரிவில் கதிர்செல்வன், மகதித் ஆகியோரும், மாணவிகள் பிரிவில் ஆர்.எஸ்.ஜி. மெட்ரிக் தன்யா-வும் சாம்பியனாக தேர்வு செய்யப்பட்டனர். 1ம் வகுப்பு மாணவர்கள் பிரிவில்  மிதுன்ராம், மாணவிகள் பிரிவில் நிலா சாய் ஆகியோர் சாம்பியனாக தேர்வு செய்யப்பட்டனர். 

மேலும் ஒட்டுமொத்த சாம்பியனாக 1 முதல் 5-வகுப்பு வரையிலான மாணவர்கள் பிரிவில் ஆர்.எஸ்.ஜி., ஸ்போர்ட்ஸ் கிளப் வின்னராகவும், திருச்சி டீம் போல்ட் ரன்னராகவும் தேர்வு செய்யப்பட்டார்கள்.  1 முதல் 5-வகுப்பு வரையிலான மாணவிகளுக்கான பிரிவில் வின்னராக ஆர்.எஸ்.ஜி., ஸ்போர்ட்ஸ் கிளப், ரன்னராக டீ அத்லெடிக் அகாடமி தேர்வு செய்யப்பட்டனர். 

12 வயது முதல் அனைத்து வயதுக்குமான பிரிவு ஆண்களில் ஒலிம்பியன்ஸ் அத்லெடிக் அகாடமி வின்னராகவும், ஐ வின் டிராக் ஸ்போர்ட்ஸ் கிளப் ரன்னராகவும் தேர்வு செய்யப்பட்டனர். 12 வயது முதல் அனைத்து வயதுக்குமான பிரிவு பெண்களில் வின்னராக ஒலிம்பியான் அத்லெடிக் அகாடமியும், ரன்னராக ஆர்.எஸ்.ஜி., ஸ்போர்ட்ஸ் கிளப்பினரும் தேர்வு செய்யப்பட்டனர். 

பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், சாம்பியன் வென்ற மாணவ-மாணவிகள் மற்றும் ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பைகளை வென்றவர்களுக்கும் சிறப்பு விருந்தினர்கள் பரிசுக்கோப்பைகளை வழங்கினார்கள். 

மேலும் இந்த போட்டிகளுக்கான தொடக்க விழாம் பரிசளிப்பு விழாவில், டெக்சான் மதிவாணன், கவுன்சிலர்கள் சாமிநாதன், கே.ஆர்.எஸ் காந்திமதி மணி,  விஜயலட்சுமி, வராஹா நெட்வொர்க்ஸ் இயக்குநர் ஏ.செந்தில், ஸ்ரீ லட்சுமி வாஸ்து நிபுணர் மோகன கிருஷ்ணா, திருப்பூர் தடகள சங்கப் பொருளாளரும், உடற்கல்வி ஆசிரியருமான ராமகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள். இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை ஐ வின் டிராக் ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் ஜெ.அழகேசன் செய்து இருந்தார். 



Previous Post Next Post