இந்திய ஜனநாயக கட்சியின் 13-ம் ஆண்டு துவக்கவிழா திருப்பூர் வடக்கு மாவட்ட ஐ.ஜெ.கே சார்பில் கொண்டாடப்பட்டது. கட்சியின் நிறுவன தலைவர் பாரிவேந்தர் எம்.பி, ஆணைப்படி, இளைய வேந்தர் ரவிபச்சமுத்து மற்றும் பொதுச்செயலாளர் ஜெயசீலன் ஆலோசணைப்படி, திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் பாரி.கணபதி தலைமையில், பெருமாநல்லூரில் உள்ள முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கியும் ,குருவாயூரப்பன் நகரில் உள்ள அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் நோட்டு உள்ளிட்ட எழுது பொருட்கள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட தலைவர் பாரி கணபதி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கருத்தப்பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் சோனைமுத்து, இளைஞரணி செயலாளர் முருகன் மாவட்ட துணை தலைவர் முருகேசன், மாவட்ட செயற்குழு கண்ணபிரான், பல்லடம் காளியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.