உடுமலை பகுதியில் ஏழாம் வகுப்பு படித்து வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 70 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 40 ஆயிரம ரூபாய் அபராதம் விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட போடிப்பட்டி தாமு நகர் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணின் இரண்டு மகள்களில், மூத்த மகள் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
அதே பகுதியில் வசித்து வந்த நவரசன்(25) என்பவர் EB இல் பணிபுரிந்து வந்ததாகவும், கடந்த 12.09.2020 ஆம் தேதி காலை 10.00 மணி அளவில் மேற்கண்ட பள்ளி சிறுமியை தன் மனைவி அழைப்பதாக பொய்யாக கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்று, கத்தியை காட்டி மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார். அப்போது அதை செல்போனில் புகைப்படம் எடுத்து விட்டு, வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என சிறுமியை மிரட்டி வீட்டிற்கு அனுப்பியுள்ளான்.
இந்த சம்பவத்திற்கு பின்பு சிறுமி சரியாக உறக்கமின்றி, சோர்வாக இருந்ததாகவும், சிறுமியை விசாரித்தபோது மேற்கண்ட சம்பவம் குறித்து தாயிடம் கூறியுள்ளார். இதனையடுத்து சிறுமியின் தாய் உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் நவரசன் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வழக்கின் விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சுகந்தி தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றவாளி நவரசன்(25) என்பவருக்கு போக்சோ சட்ட பிரிவிற்கு 20 ஆண்டுகள் சிறை மற்றும் 10000 ரூபாய் அபராதமும், 5(h) Pocso சட்ட பிரிவிற்கு 20 ஆண்டுகள் சிறை மற்றும் 10000 ரூபாய் அபராதமும், 376(AB) IPC சட்ட பிரிவிற்கு 20 ஆண்டுகள் சிறை மற்றும் 10000 ரூபாய் அபராதமும், 506(ii)- ற்கு 07 ஆண்டுகள் சிறை மற்றும் 5000/- ரூபாய் அபராதமும், 11(v) Pocso சட்ட பிரிவிற்கு 03 ஆண்டுகள் சிறை மற்றும் 5000/- ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்கள். என மொத்தமாக 70 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் பிரபு ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் சிறப்பாக விசாரணை செய்து, சாட்சிகளை உரிய நேரத்தில் ஆஜர்படுத்தி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த உடுமலை அனைத்து மகளிர் காவல் துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.