திருப்பத்தூர் வேன் விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு.!

திருப்பத்தூர்  மாவட்டத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் முதற்கட்டமாக 7 பேர் உயிரிழந்தாக தகவல்கள் வெளியான நிலையில் தற்பொழுது பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலையை அடுத்துள்ள புலியூரைச் சேர்ந்த 30 க்கும் மேற்பட்டோர் வேனில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றனர். அப்பொழுது செம்பரை என்ற பகுதியில் நிலை தடுமாறிய வாகனம் 50 அடி பள்ளத்திற்குள் விழுந்தது. இந்தவிபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றவர்கள் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில்  விபத்தில் சிக்கிய 10 ஆம் வகுப்பு பயின்று வந்த ஜெயப்பிரியா என்ற மாணவி மருத்துவமனையில் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்தது.

இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விபத்தில் உயிரிழந்த 7 பேரின் ( துர்கா, பவித்ரா, சர்மிளா, செல்வன், சுகந்தா, மங்கை, ஜெயப்பிரியா) குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் இந்த விபத்தில் மேலும் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் மொத்தம் 3 பள்ளி மாணவிகள் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 22 பேருக்கு சிறப்பு சிகிச்சை வழங்கிட தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Ahamed

Senior Journalist

Previous Post Next Post