இராமநாதபுரம் பெண்கள் நல அறக்கட்டளை சார்பில் பனை ஓலை கைவினைத்தொழில் செய்யும் 100 பெண்களுக்கு இரண்டு நாள் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம்

இந்திய அரசு, ஜவுளி அமைச்சகம், மேம்பாட்டு ஆணையர் அலுவலக நாகர் கோயில், கைவினைப் பொருட்கள் சேவை மையம்,  மூலம் பெண்கள் நல அறக்கட்டளை இராமநாதபுரம் சார்பில் இரண்டு நாள் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கு  கிளஸ்டர் பனை ஓலை கைவினைத்தொழில் தொடக்க விழா.

இராமநாதபுரம் தனியார் மஹாலில் மகளிர் நல அறக்கட்டளை நிறுவனர்  கே.கல்யாணி தலைமையில் நடைபெற்றது, பயிற்சி மற்றும் துவக்கவிழா வில், மகளிர் நல அறக்கட்டளை  நிதி அறங்காவலர் சுசிலா, அறங்காவலர்கள் மலர்கொடி, சந்தோஷ்மேரி, ஜெயக்கொடி, சரஸ்வதி ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்,  இதில் வேளாண் இணை இயக்குநர், ஷேக் அப்துல்லா, RDCC வங்கி இணைப் பதிவாளர், நிர்வாக இயக்குநர் மனோகரன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரிமுத்து, நபார்டு வங்கி டிடிஎம், அருண்குமார், மாவட்ட முன்னோடி வங்கி டிடிஎம், கார்த்திகேயன், நாகர்கோவில் கைவினைப் பொருட்கள் சேவை மைய,  ஊக்குவிப்பு அலுவலர் பிரஜிஷா, உதவி கைவினைப் பொருட்கள் சேவை மைய வடிவமைப்பாளர்  ரேவதி,மாவட்ட தொழில் மைய, AE,  பிரதீப்,  வேளாண் சந்தைப்படுத்தல் நிர்வாக அதிகாரி அண்ணாதுரை,வேளாண் சந்தைப்படுத்தல் ஆலோசகர் நூருல் கதீஜா,ராமேஸ்வரம் ஆடிட்டர்,  ஆரோக்கியா ராகேஷ், ஆகியோர்கள் கலந்து கொண்டு, 100 பனை விவசாய பெண்களுக்கு பனை பொருட்களை எப்படி மதிப்புக்கூட்டு செய்வது என்பது தொடர்பாகவும், மற்றும் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு தேவையான பயிற்சிகள், கருத்துரைகள் வழங்கப்பட்டது, 


நிகழ்ச்சியின் முடிவில் மகளிர் நல அறங்காவலர் வி.எம்.கார்த்திகேயன் நன்றியுரை ஆற்றினார். இதில் இராமநாதபுரம், பரமக்குடி சுற்றுவட்டாரத்தை சேர்ந்த சுமார் பனைத்தொழில் செய்யும் 100 பெண்கள் கலந்து கொண்டனர், இந்நிகழ்ச்சியை தொடர்ந்து நாளை பனை தொழில் செய்வதற்கான உபகரணங்கள் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post