இனி சனிக்கிழமையும் சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் : பத்திரப்பதிவுக்கு கட்டணமாக ரூ.1000 வசூலிக்கப்படும் - அரசு அறிவிப்பு

விடுமுறை நாளன்று பத்திரப்பதிவு பணியை மேற்கொள்ளும் வகையில் சார்பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்படும்.

அலுவலகங்களில் பணியாற்றும்
பொதுமக்களின் வசதிக்காக
சனிக்கிழமைகளிலும் இயங்கும் வகையில் நடவடிக்கை

விடுமுறை நாளில் நடைபெறும் பத்திரப்பதிவுக்கு கட்டணமாக ரூ.1000 வசூலிக்கப்படும்

இது தொடர்பாக பேரவையில் பேசிய வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேரவையில் அறிவித்தார். சென்னை மண்டலத்தில் தாம்பரத்தை தலைமையிடமாக கொண்டு கூடுதலாக ஒரு பதிவு மண்டலம் உருவாக்கப்படும் எனவும் கூறினார். அவசர ஆவண பதிவிற்காக, பதிவுத்துறையில் தட்கல் முறை அறிமுகம் செய்தார். தட்கல் முறையில் ரூ.5 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படும் என அமைச்சர் அறிவித்தார். தமிழ்நாட்டில் சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி சனிக்கிழமையும் செயல்படும் சார்பதிவாளர் அலுவலகங்களில் சனிக்கிழமை மட்டும் ரூ.1,000 கட்டணமாக வசூலிக்கப்படும். பதிவுத் துறையில் ஆவண எழுத்தர் உரிமங்கள் புதிதாக வழங்கப்படும். திருமணச் சான்றிதழில் திருத்தம் செய்ய இணைய வழியாக விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்படும்.

பதிவு செய்யப்பட்ட திருமண சான்றுகளை இணையம் வழியாக விண்ணப்பித்து திருத்தம் செய்யும் வசதி ரூ.60 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும் என கூறினார். மக்கள் தாங்கள் பெறும் பொருளுக்கான விலைப்பட்டியலை கேட்டுப்பெற எனது விலை பட்டியல் எனது உரிமை திட்டம் செயல்படுத்தப்படும் என கூறினார். வரி ஏய்ப்பை கண்டுபிடிக்க தேசிய தகவல் மையம் உருவாக்கியுள்ள GST மென்பொருள் வாங்கி பயன்படுத்தப்படும்.  

பதிவுத்துறையில் கடந்த காலங்களில் நடந்த முறைகேடுகள், தவறான ஆவணப் பதிவுகளை கண்டறிந்து சரி செய்ய சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. வணிக வரி, பதிவுத்துறை அரசுக்கு வருவாய் ஈட்டுவதில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. கடந்த ஆண்டுகளை விட வணிக வரித் துறையில் வருவாய் அதிகரித்துள்ளது. போலி பட்டியல் தயாரித்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

#registeroffice  #TamilNadu  #TNGovt  #WorkingDays

Ahamed

Senior Journalist

Previous Post Next Post