வட நாட்டில் பீஸ்ட், ஆர்ஆர்ஆர் ஐ பின்னுக்கு தள்ளி இரண்டு நாளில் 100 கோடி அள்ளிய கேஜிஎஃப் 2 - பீஸ்ட் 15 லட்சத்திற்கு தள்ளாட்டம்.!


வட இந்தியாவில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இரண்டாவது நாள் வசூல் சாதனையை 'கேஜிஎஃப் 2' திரைப்படம் முறியடித்துள்ளது. பீஸ்ட் வெறும் 15 லட்சம் மட்டும் வசூலாகி பரிதாபமாக திரையரங்குகளில் காற்று வாங்கிக் கொண்டிருக்கிறது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ் நடிப்பில் கடந்த 14-ம் தேதி வெளியான திரைப்படம் 'கேஜிஎஃப் 2'. ஸ்ரீனிதி ஷெட்டி, சஞ்சய் தத், ஈஸ்வரி ராவ், ரவீனா டன்டன் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். தமிழ், கன்னடம், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய 5 மொழிகளில் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கேஜிஎஃப் 2' படத்தின் இந்திப் பதிப்பு இரண்டாவது நாளில் (ஏப்ரல் 15) 44 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இந்திப் பதிப்பு இரண்டாவது நாளில் ரூ.3 கோடி ரூபாயை வசூலித்தது. இதன் மூலம் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் இரண்டாவது நாள் வசூலை 'கேஜிஎஃப் ' முறியடித்துள்ளது. அதேநேரம், விஜய் மற்றும் பூஜா ஹெக்டே நடித்த பீஸ்ட் இந்தியில் இரண்டாவது நாள் வெறும் ரூ.15.லட்சம் மட்டுமே வசூலாகி தியேட்டர்களை காற்றாட வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வட இந்தியாவில் 'கேஜிஎஃப் 2' படம் வெளியான முதல் நாள் ரூ.53.95 கோடியும், இரண்டாவது நாள் ரூ.46 கோடியும் வசூலித்துள்ளது. படம் வெளியான இரண்டு நாட்களில் ரூ.100 கோடியை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கியுள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம், பாகுபலி திரைப் படத்தின் சாதனையை முறியடித்து, முதல் நாள் மட்டும் ரூ.257 கோடி வசூல் செய்துள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post