தூத்துக்குடி டூவிபுரம் அருகே கஞ்சா விற்ற மூவர் கைது 1 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல்.!


மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக கஞ்சா  கடத்திய 3 பேர் கைது - 1 கிலோ 150 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.பாலாஜி சரவணன்  அனைத்து  உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் போலீசார் அடங்கிய பல்வேறு தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

 


மத்தயபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் உதவி ஆய்வாளர் முருகபெருமாள் மற்றும் போலீசார் நேற்று தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த  இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், 

அதில் தூத்துக்குடி டி.எம்.பி காலனி  பகுதியை சேர்ந்த மாடசாமி மகன் சுப்புராஜ் (23), தூத்துக்குடி வடக்கு சோட்டையன்தோப்பு பகுதியை சேர்ந்த ஜெயபால் மகன் முத்துகுமார் (37) மற்றும் தூத்துக்குடி காந்தி நகரை சேர்ந்த செந்தில்வேல் மகன் முத்துராஜ் (46) ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனத்தில் கஞ்சாவை கடத்தியது தெரியவந்தது. 

உடனே போலீசார்  சுப்புராஜ், முத்துகுமார் மற்றும் முத்துராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 1 கிலோ 150 கிராம் கஞ்சா மற்றும் TN 69 BH 2867 (Honda Dio) என்னும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுகுறித்து மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி எதிரிகளில் சுப்புராஜ் மற்றும் முத்துகுமார் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் தலா ஒரு வழக்கும்,  எதிரி முத்துராஜ் மீது தென்பாகம் காவல் நிலையத்தில் 2 திருட்டுவழக்குகள் உட்பட 3 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post