சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் மாணவர்கள் சேர வேண்டாம்.! - UGC எச்சரிக்கை.!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.யில், தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படாததால், மாணவர்கள் சேர வேண்டாம் என UGC எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொலைநிலை படிப்பை நடத்த, மத்திய அரசின் UGC எனப்படும் பல்கலை மானிய குழுவின் அங்கீகாரம் பெற வேண்டும். அங்கீகாரம் பெறாத படிப்புகளை படித்தால், உயர் கல்வியில் சேர முடியாது; வேலை வாய்ப்பும் கிடைக்காது.

எனவே, அங்கீகாரம் இன்றி, தொலைநிலை படிப்பை நடத்த, அண்ணாமலை பல்கலை.க்கு யு.ஜி.சி., தடை விதித்துள்ளது

சிதம்பரம் அண்ணாமலை பல்கலை. யு.ஜி.சி., அங்கீகாரம் பெறாமல், தொலைநிலை படிப்புகளில் மாணவர்களை சேர்த்து வருகிறது, இது, தொலைநிலை படிப்புக்கான ஒழுங்குமுறை விதிகளை முழுமையாக மீறும் செயல் 

அங்கீகாரம் பெறாமல், எந்த உயர் கல்வி நிறுவனமும், தொலைநிலை, திறந்த நிலை மற்றும், 'ஆன்லைன்' படிப்புகளை நடத்த அனுமதி கிடையாது. அண்ணாமலை பல்கலைக்கு, 2014--15ம் ஆண்டு வரை மட்டுமே, தொலைநிலை படிப்புகளை நடத்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, யு.ஜி.சி., அங்கீகாரம் பெறாமல், அண்ணாமலை பல்கலை நடத்தும் படிப்புகள் செல்லத்தக்கதல்ல என யு.ஜி.சி., செயலர் ரஜனீஷ் ஜெயின் தகவல்


Ahamed

Senior Journalist

Previous Post Next Post