டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க புதிய நடைமுறை அறிமுகமாகவுள்ளது என டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிடும் தேர்வுகளுக்கு இனி விண்ணப்பிக்கும் போதே சான்றிதழ்களை பிடிஎஃப் வடிவில் பதிவேற்ற வேண்டும். சான்றிதழ் பதிவேற்றத்தில் தவறு இருந்தால் ஓடிஆர்(otr) கணக்கு மூலம் சரிசெய்ய அவகாசம் வழங்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
மேலும், விண்ணப்பிக்கும்போது சமர்பிக்கப்படும் சான்றிதழ்கள் அடிப்படையிலேயே தேர்வுக்குப்பின் அசல்சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.