உக்ரைன் போர் சூழலை பயன்படுத்தி 323 கோடி பணத்துடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோட்விட்ஸ்கியின் மனைவி (28 மில்லியன் டாலர்கள் மற்றும் 1.3 மில்லியன் யூரோக்கள் ) சூட்கேஸ்களில் பதுக்கி வைத்துக்கொண்டு, உக்ரைனில் இருந்து தப்பி ஜகர்பட்டியா மாகாணம் வழியாக ஹங்கேரிக்குள் நுழைய முயன்ற போது, ஹங்கேரிய எல்லைக் காவலர்களால் எல்லையில் பணத்துடன் அவர் பிடிபட்டார், இதனையடுத்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
உக்ரைன் நாடாளுமன்ற எம்.பி.யான கொத்வித்ஸ்கி முன்பே ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவராவார். இவருடைய மனைவி, போர் சூழலை பயன்படுத்தி கொண்டு, வேறு நாட்டுக்கு தப்பி செல்லும் நோக்குடன் சூட்கேஸ்களில் முடிந்தவரை பணம் நிரப்பியுள்ளார்.
இதன்பின்பு, மக்களுடன் மக்களாக ஜக்கர்பாட்டியா மாகாணத்திற்கு வந்து உக்ரைனுடனான எல்லை வழியே ஹங்கேரி நாட்டுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளார். அவரிடம் இருந்த சூட்கேஸ்களில் 28 மில்லியன் டாலர் (ரூ.212.9 கோடி) மற்றும் 1.3 மில்லியன் யூரோ (ரூ.10.91 கோடி) மதிப்பிலான பணம் இருந்துள்ளது.
எனினும், எல்லை பகுதியில் காவல் பணியில் ஈடுபட்டு இருந்த உக்ரைன் காவல் படை வீரர்கள் அவரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டு உள்ளனர். இதில், சூட்கேஸ்களில் இருந்த பணம் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு உள்ளது.