திருப்பூர் லட்சுமி நகர் பகுதியில் வசிப்பவர் பொன்சுந்தரம் வயது 68 இவர் அப்பகுதியில் கடந்த 39 வருடங்களாக குடியிருந்து வருகிறார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார் அந்த மனுவில்:- தான் குடியிருக்கும் வீட்டை கடத்த 1983 ம் வருடம் கிரயம் வாங்கியதாகவும் வீட்டின் மேல்புறம் உள்ள சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள காம்பவுண்ட் சுவரை எனது பக்கத்தில் குடியிருக்கும் மகாலிங்கம், அவரது மகன்கள் நிசாந்த், விவேக், ராஜேஸ்வரி மற்றும் அவரது ஆட்கள் சுமார் 10 நபர்கள் சேர்ந்து கடந்த 08-03-2022 அன்று பிரேக்கர் மெசின் , கடப்பாறை , கொன்டாலம் ஆசியவற்றை கொண்டு உடைத்தார்கள் . நான் உடனே எனது சாம்பவுண்ட் சுவரை ஏன் இடிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு உன்னையும் உனது மனைவி , மகள் எல்லோரையும் இந்த சுடப்பாறையை வைத்து அடித்தே கொன்று விடுவோம் தைரியமிருந்தால் பக்கத்தில் வா பார்ப்போம் என்று சொல்லி மகாலிங்கம் கடப்பாறையை கொண்டு என்னை அடிக்க ஓடி வந்தார் நான் உயிருக்குப் பயந்து அந்த இடத்திலிருந்து ஓடி வந்து விட்டேன் . இன்னிலையில் கடந்த 11-03-2022ம் நேதி எனது காம்பவுண்ட் சுவரை இடித்த இடத்தில் இருந்த இரும்பு பைப் ஒன்றை மேற்படி மகாலிங்கமும் சிலரும் அறுத்து எடுத்தார்கள் . நான் ஏன் இரும்பு பைப்பை அறுக்கிறீர்கள் என்று கேட்டதற்கு நிசாந்த மற்றும் விவேக் ஆகியோர் மீண்டும் என்னை அடித்து கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்கள் . எனது காம்பவுண்ட் சுவருக்கு அடுத்து 13 அடி அகல பொது பாதை உள்ளது . அந்த பொதுப்பாதையை இப்போது மேற்படி மகாலிங்கம் நனது நிலம் என்று சொல்லி ஒவ்வொரு நாளும் அவரது . ஆட்களை கூட்டிக்கொண்டு வந்து என்னை மிரட்டி அதிக மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறார்கள் . இன்னிலையில் மேற்படி மகாலிங்கம் திருப்பூர் முன்சீப் கோர்ட்டில் என் மீது ஒரு வழக்குப் போட்டார் , ஆனால் மேற்படி 13 அடி அகல பாதை பொது பாதை என்பதால் அவருக்கு ஆதரவாக நீதிமன்றம் எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்க வில்லை . ஆசையால் சட்டத்திற்குப் புறம்பான வழியில் அடியாட்களைக் கொண்டு எனது காம்பவுண்ட் சுவரை இடித்து விட்டார் . பின்னர் நேற்று இரவு 8 மணியளவில் மகாலிங்கம் , அவரது மனைவி ராஜேஸ்வரி , மகன்கள் பிரசாந்த் , நிசாந்த் மற்றும் துரைஸ் , விவேக் ஆகியோர் கூட்டு சேர்ந்து அடியாட்கள் சிலரோடு கடப்பாறை , கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் எனது வீட்டின் பின்புறம் நின்றுகொண்டு எனது வீட்டின் பகுதியை இடிக்க ஆயத்தமாகி வந்தனர் . எனவே நான் இது குறித்து காவல் உதவி எண் .100 ஐ தொடர்பு கொண்டும் விபரம் தெரிவித்ததும் அங்கு வந்த காவல் அதிகாரிகள் மேற்படி நபர்களை விரட்டி விட்டனர் . ஆகையால் மாவட்ட ஆட்சியர் கருணை புரிந்து எனது வீட்டு காம்பவுண்ட் சுவரை இடித்தும் இரும்பு பைப்புகளை அறுத்தும் ஏன் என்று கேட்ட என்னை கொன்று விடுவதாக மிரட்டி வரும் எனது பக்கத்து வீட்டைச் சேர்ந்த மகாலிங்கம் மற்றும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் படியும் எனது உயிருக்கும் எனது குடும்பத்தினர் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.