கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இளையரசனேந்தல் பிர்காவை சேர்ந்த 12 பஞ்சாயத்துகளை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி யூனியன் உடன் சேர்க்கவும், தூத்துக்குடி வருவாய் மாவட்டம், கோவில்பட்டி வட்டத்தில் தொடரவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து 110 விதியின் கீழ் வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் தீர்மானம் இயற்றிய இணைக்க வேண்டும். 


தவறும்பட்சத்தில் வருகிற 23.03.2022 கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பாக 12 பஞ்சாயத்து பொதுமக்களை திரட்டி மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று மேற்படி மனுவில் கூறப்பட்டு இருந்தது. 

மனு கொடுக்கும் போராட்டத்துக்கு ரெங்கநாயகலு தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் தலைமை வகித்தார். கோபாலகிருஷ்னன் இளையரசனேந்தல் பிர்கா உரிமை மீட்பு ஒருங்கிணைப்பாளர், முன்னிலை வகித்தார். 

இந்த மனு கொடுக்கும் போராட்டத்தில் கற்பூரராஜ் பிர்கா உரிமை மீட்பு துணை ஒருங்கிணைப்பாளர், கருப்பசாமி ஆடு வளர்ப்போர் சங்க மாநில தலைவர், ராகுல் இளைஞர் அணி மாவட்ட தலைவர், ராஜ்குமார் தேசிய விவசாயிகள் ஊடக பொறுப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டனர் 

முடிவில் கோட்டாட்சியர் உதவியாளர் இசக்கி ராஜ் அவர்களிடம் மனு அளித்து விட்டு கலைந்து சென்றனர்.

Previous Post Next Post