சர்வதேச துபாய் எக்ஸ்போ கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கைத் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

துபையில் நடைபெற்று வரும் சர்வதேச #dubaiexpo2020 தொழில் கண்காட்சியில் தமிழகத்தின் அரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

https://twitter.com/CMOTamilnadu/status/1507369910476816393?t=7XPAjVkSVAp238OYaUORuA&s=19

துபையில் கடந்த அக்டோபர் 1-இல் தொடங்கிய சர்வதேச தொழில் கண்காட்சி, வருகிற மார்ச் 31 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இங்கு மார்ச் 25 முதல் 31 வரை தமிழ்நாடு வாரமாக கண்காட்சியில் உள்ள தமிழ்நாடு அரங்கில்
கடைப்பிடிக்கப்படவுள்ளது.

இந்நிலையில் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசுமுறை பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் துபை சென்றுள்ளார். அங்கு அந்நாட்டின் அமைச்சர்களை சந்தித்துப் பேசிய அவர் புதிய முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) துபை சர்வதேச தொழில் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழக அரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


பின்னர் உலக கண்காட்சியில் இந்திய அரங்கில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கினை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் திறந்து வைத்து, கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டு, துபாய் வாழ் தமிழர்களிடையே உரையாற்றினார்.


தமிழ்நாடு அரங்கில் தொழில், மருத்துவம், சுற்றுலா. கலை, கலாசாரம், கைத்தறி, கைவினைப் பொருள்கள், ஜவுளி, தமிழ் வளர்ச்சி, தகவல், மின்னணுவியல், தொழிற்பூங்காக்கள், உணவுப் பதப்படுத்துதல் போன்ற முக்கிய துறைகளில் தமிழ்நாட்டின் சிறப்பை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் காட்சிப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.
Ahamed

Senior Journalist

Previous Post Next Post