துபாய் பயணத்தின் போது முதல்வர் அணிந்திருந்த உடை குறித்து தவறான தகவலை பரப்பியதாக சேலம் மாவட்டம் பாஜக நிர்வாகி அருள் பிரசாத் கைது.
தமிழக முதல்வரின் துபாய் சுற்றுப் பயணம் குறித்தும் அவர் அணிந்திருந்த ஆடை குறித்து தனியார் தொலைக்காட்சியில் வெளியிடுவது போன்று வடிவமைத்து எடப்பாடி பகுதியைச் சேர்ந்த சேலம் மேற்கு பாஜக பொதுச்செயலாளர் அருள் பிரசாத்
என்பவர் ட்வீட் வெளியிட்டிருந்தார். அதில், முதல்வர் ஸ்டாலின் துபாய் செல்லும்போது அணிந்திருந்த கூலிங் ஜாக்கெட் விலை 17 கோடி ரூபாய் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல் வெளியிட்டதாக அந்த ட்வீட்டில் கூறப்பட்டிருந்தது.
ஆனால், அது பொய்யான தகவல் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மறுப்பு தெரிவித்தார்.
மேலும், பாஜகவைச் சேர்ந்த அந்த நபரின் விவரத்தை வினய் கார்த்திகேயன் என்பவர்
அமைச்சரை டேக் செய்து
ட்வீட்டினார். அதற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் ரிப்ளை செய்திருந்தார்.
அப்போதே பாஜக நிர்வாகி
அருள் பிரசாத்திற்கு ஸ்கெட்ச்
போட்டுவிட்டது என நெட்டிசன்கள்
கமெண்டிட்டு வந்த நிலையில்,
இதுதொடர்பாக விசாரணை
மேற்கொண்ட எடப்பாடி
காவல்துறையினர் செய்தியை
பொய்யான முறையில்
வடிவமைத்து வெளியிட்டதாக
பாஜக பிரமுகர் அருள் பிரசாரத்தை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.