வாணியம்பாடியில் உள்ள இஸ்லாமியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் 442 மாணவிகளின் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கல்லூரிச் செயலா் கைசா் அகமது தலைமை வகித்து தொடக்கி வைத்துப் பேசினாா். துணை முதல்வா் ஆரிஃபா பஷீா் முன்னிலை வகித்தாா். முதல்வா் ரேணு வரவேற்றாா். விழாவில் சிறப்பு அழைப்பாளராக சென்னை அமெரிக்க துணைத்தூதரகத்தின் துணைத் தூதர் ஜூடித் ரேவின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பட்டமளிப்பு விழாவில், பேசிய அமெரிக்க துணைத் தூதர் ஜூடித் ரேவின் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்திற்கான அர்ப்பணிப்பை எடுத்துரைத்தார்.
“இரக்கத்தைக் காட்டுதல், தேவைப்படும் மக்களுக்கு ஆதரவாக நிற்பது, உங்கள் குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்குத் அதனை திரும்பக் கொடுப்பது, உருமாற்றும் தலைமையின் ஒரு அற்புதமான வடிவமாகும்” என்று கூறினார்.
விழாவில் வாணியம்பாடியின் முக்கிய முஸ்லிம் கல்விச் சங்கத் தலைவா் மோதா அகமத் பாஷா, நிா்வாகிகள் கனி முகமது அசாா், முனீா் அகமது, நரிமுகமது நயீம், முன்னாள் முதல்வா் மேஜா் சையத்சகாபுதீன், ஆண்கள் கல்லூரி முதல்வா் முகமது இலியாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.