தொடர் சிக்ஸராய் தொய்வில்லாமல் தொடர்பணி சூலூர் பேரூராட்சியில்


மார்ச் 16

கோவை சூலூர் பேரூராட்சியில் 16வது பேரூராட்சி மன்றத் தலைவராகப் பொறுப்பேற்ற நாளிலிருந்து தொடர் சேவைகளை தொய்வில்லாமல் வார்டு வாரியாக நலத்திட்டப் பணிகளை ஆய்ந்தும், அறிவித்தும், செயல்படுத்தியும் வருகிறார் சூலூர் பேரூராட்சியின் புதிய தலைவர் தேவிமன்னவன் சூலூர் பேரூராட்சியின் 8வது வார்டு ஜி கே எஸ் நகரில் வசித்து வரும் பொதுமக்களின் நீண்டகால வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் கழிவுநீர் வடிகால் கட்ட பூமி பூஜை போடப்பட்டது 

பதவியேற்ற நாள் முதலே பம்பரமாக சுழல்வதோடு மட்டுமன்றி சூரியனே இவருக்கு பின்னால்தான் தன் பணியையே துவக்குகிறது என்கிறார் சூலூர் பேரூராட்சியின் எட்டாவது வார்டு கவுன்சிலர் வே பாலாஜி மேலும் தலைவரின் செயல்பாடுகளைப்பற்றிக் கூறவேண்டுமென்றால்

ஒவ்வொரு நாளும் பகுதியின் பணிகளையும், குறைகளையும் கேட்டறிவதோடு நில்லாமல் வாரம்  ஒருதினம் ஒவ்வொரு வீதிவாரியாக தலைவரே களத்திலும் இறங்கி விடுகிறார் மக்களோடு மக்களாக 

வீடுதோறும், வீதிதோறும் எங்கள் தலைவர் என்ற முத்திரையை பொதுமக்களிடம் தொடர்ந்து பதித்து வருவதோடு தான், தலைவர், என்பதை எந்த மக்களிடமும் முன் நிறுத்த முயற்சிப்பதே இல்லை என்பது அரசியல் களத்தில் அதிசியத்து ஆச்சர்யமாகப் பார்க்கப்படுகிறது எனகிறார் கவுன்சிலர் வே பாலாஜி நிகழ்வின்போது

ஜி கே எஸ் நகர் குடியிருப்போர் நல அமைப்பு தலைவர் பழனி,சாமிநாதன், ஆறுமுகம்,பழனிச்சாமி மற்றும் நகரப் பொதுமக்கள் உடனிருந்தனர்.

Previous Post Next Post