தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் 100 கோடி மதிப்பில் பழைய பேருந்து நிலையம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் கான்கிரீட் தரத்திலான பல்வேறு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதில் சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு வாகனம் நிறுத்தும் இடத்தை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்து பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்
ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் சரவணன், கவுன்சிலர்கள் கீதா முருகேசன் கனகராஜ் நிர்வாகிகள் பிரபாகர், ஜேஸ்பெர், ஜான்சன் டேவிட், டேனியல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.