மணப்பாடு கடற்கரை பகுதியில் அரியவகை ஆமை குஞ்சுகளை கடலில் விடும் பணி- கனிமொழி கருணாநிதி எம்.பி துவக்கி வைத்தார்.!


தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடற்கரை பகுதியில் அரியவகை ஆமை குஞ்சுகளை கடலில் விடும் பணிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி எம்.பி துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடலில் ஆலிவ்  ரிட்லி என்ற அரிய வகை ஆமை குஞ்சுகளை கடலில் விடும் பணிகளை வனத் துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள் அந்த வகையில் இன்று  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை அடுத்த உள்ள மணப்பாடு கடற்கரையில் தமிழ்நாடு வனத்துறை சார்பில் இனப்பெருக்கத்திற்காக அரியவகை கடல் ஆமைகள் இட்ட முட்டைகளை சேகரித்து வைத்து, 


அதன் குஞ்சுகளை மீண்டும் கடலில் விடும் பணியை கழக மகளிர் அணி செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி எம்.பி துவங்கி வைத்தார் இதைத் தொடர்ந்து ஏராளமான ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன 

இந்த நிகழ்வில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் என்.பி.ஜெகன் பெரியசாமி  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், திருச்செந்தூர் வன அலுவலர் ரவீந்திரன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்

Previous Post Next Post