சசிகலா, டிடிவிதினகரனை அதிமுகவில் இணைப்பது குறித்து தேனியில் தீர்மானம் நிறைவேற்றி ஓ.பன்னீர்செல்வத்திடம் கொடுத்துள்ள நிலையில் இது குறித்து
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகிலுள்ள கடம்பூரில் முன்னாள் அமைச்சரும்.கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில் :
ஒரு மாவட்டத்தில் எதிர்ப்பு தெரிவிப்பதும் மற்றொரு மாவட்டத்தில் ஆதரவு தெரிவிப்பது என்பது அதிமுகவில் மேலும் விரிசலை தான் ஏற்படுத்தும் எம்ஜிஆர் காலத்திலும் சரி ஜெயலலிதா காலத்திலும் கட்சி முடிவுகளை பொதுக்குழு கூடி தான் முடிவெடுப்பார்கள்
இப்போது தேனி மாவட்டத்தில் ஒரு சில நிர்வாகிகள் தான் அந்த தீர்மானத்தை கொண்டு போய் ஒருங்கிணைப்பாளரிடம் கொடுத்து உள்ளனர் ஆனால் இதுவரை ஒருங்கிணைப்பாளர் இது குறித்து எதுவும் பேசவில்லைஇது குறித்து எதையும் பொதுவெளியில் கூற முடியாது பொதுக்குழு கூடி தான் எந்த ஒரு முடிவு எடுக்க முடியும் என்றார்.