முதலமைச்சர் பதவியேற்பு விழாவிற்காக விளை நிலங்களை பார்க்கிங் ஏரியாவாக மாற்றும் ஆம் ஆத்மி பார்ட்டி.!


பஞ்சாப் முதலமைச்சர் பதவியேற்பு விழாவிற்கான வாகன நிறுத்துமிடத்தை தயார் செய்ய, விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை அகற்றும் ஆம் ஆத்மி கட்சியினர்!

சுமார் 40 ஏக்கர் விவசாய நிலத்தை வாகன நிறுத்துமிடமாக மாற்ற உள்ளதாகவும் ஒரு ஏக்கர் நிலத்திற்கு ரூ.46,000 இழப்பீடு வழங்கவுள்ளதாகவும் தகவல்!

கடனில் சிக்கியுள்ள மாநில அரசு பதவியேற்பு விழாவுக்கு ரூ.2.61 கோடியை அனுமதித்துள்ளது. ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள வரும் பார்வையாளர்களின் வாகனங்களை நிறுத்த கோதுமை வயல்கள் பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


புகழ்பெற்ற சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்குக்கு மரியாதை செலுத்தும் வகையில் மஞ்சள் தலைப்பாகை அணிந்திருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் நியமன முதல்வர் பகவந்த் மானின் பதவியேற்பு விழாவுக்காக குறைந்தது 40 ஏக்கர் கோதுமை பயிர் அழிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இன்னும் முதிர்ச்சியடையாத நிலையில் உள்ள பயிர்களை உழுது, அதற்கு பதிலாக ஏக்கருக்கு சுமார் 46,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நவன்ஷாஹர் துணை ஆணையர் விஷேஷ் சாரங்கல் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்றாலும், விவசாயிகளுக்கு இழப்பீடாக ஏக்கருக்கு 46,000 ரூபாய் வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

கூடுதல் தலைமைச் செயலாளர் ஏ. வேணு பிரசாத் திங்கள்கிழமை கட்கர் காலானில் பதவியேற்பு விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். 

விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக ஷாஹீத் பகத் சிங் நகர் துணை ஆணையரிடம் 2.61 கோடி ரூபாய் ஒதுக்குமாறு வருவாய் மற்றும் மறுவாழ்வுத் துறையிடம் கேட்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் அரசின் உத்தரவைப் பகிர்ந்துள்ளார். பதவியேற்பு விழாவில் சுமார் 1 லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Post Next Post