ஹிஜாப் தீர்ப்பை கண்டித்து திருப்பூரில் அனைத்து இஸ்லாமிய ஜமா அத் சார்பில் ஆர்ப்பாட்டம்

கர்நாடக மாநிலத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து செல்வதற்கு தடை விதித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து திருப்பூரில் அனைத்து இஸ்லாமிய ஜமா அத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு.
கர்நாடகத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் உடை அணிந்து செல்ல இஸ்லாமிய மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றம் கர்நாடக அரசின் தடை உத்தரவு செல்லும் என உத்தரவு பிறப்பித்திருந்தது . இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருப்பூர் காங்கேயம் சாலை சிடிசி கார்னர் பகுதியில் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு மாவட்ட தலைவர்.இப்ராஹிம் கலீல் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஹிஜாப் தடைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும்,மத்திய அரசிற்கு எதிரான கோசங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்பாட்டத்தில் அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பின்பொதுச்செயலாளர்.A.முகம்மது யாசர் அராஃபத் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரவேற்புரை நிகழ்த்தினார்.இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post