மணப்பாறையில் கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக் திடீரென தீ பிடித்து எரிந்ததில் பைக் முற்றிலும் சேதமடைந்தது.
திருச்சி மாவட்டம், படுகைகளம் பகுதியை சேர்ந்தவர் முருகேஷ் (வயது 27). இவர் நேற்று சிங்கப்பூர் செல்வதற்காக தனது எலக்ட்ரிக் பைக்கில் மணப்பாறைக்கு வந்து விட்டு பின்னர் ஆஞ்சநேயர் பகுதியில் உள்ள ஒரு கடையில் பைக்கை நிறுத்தி விட்டு சென்று விட்டார். இன்று காலை கடைக்காரர் எலக்ட்ரிக் பைக்கை எடுத்து வெளியே வைத்த போது பைக்கின் பேட்டரி பகுதியில் இருந்து புகை கிளம்பியது. பின்னர் தண்ணீரை உற்றி அணைக்க முயற்சித்தனர். இருப்பினும் சிறிது நேரத்தில் தீப்பற்றி எறிந்ததில் பைக் முற்றிலும் சேதமடைந்தது. பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு தினங்களுக்கு முன் வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரத்தில் எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்ததில் தந்தையும் மகளும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் மீண்டும் ஒரு எலக்ட்ரிக் பைக் தீப்பிடித்து எரிந்துள்ளது, எலக்ட்ரிக் வாகனங்களின் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.